Wednesday, April 3, 2013

உற்சாகத்துக்கு அவ்வளவு வலிமை...!



திருடன் ஒருவன் சர்க்கஸ் பார்க்கப் போனான்.அதில் ஒரு நிகழ்ச்சி அவனைக் கவர்ந்தது.ஒரு வளையத்தில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது.ஒருவன் பாய்ந்து வந்து அந்த வளையத்துக்குள் பாய்ந்து வெளிவந்தான்.

நிகழ்ச்சி முடிந்ததும் திருடன் அவனைப் பார்த்து,''இங்கு உனக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கிறதோ அதைப்போல ஐந்து பங்கு தருகிறேன்.நீ என்னுடன் வா,''என்று கூற அவனும் சரியென்று கிளம்பினான். பின் அவனுக்குத் தனது தொழில் பற்றிக் கூறிவிட்டு முதல் முறையாக அவனை அழைத்துக் கொண்டு ஒரு வீட்டிற்குத் திருடப் போனான்.

அங்கு சுவற்றில் கன்னம் வைத்தான்.பின் சர்க்கஸ்காரனிடம் அந்த துவாரத்துக்குள் பாய்ந்து உள்ளே சென்று பொருட்களை எடுத்துக் கொண்டு வரச்சொன்னான். அந்த துவாரத்தின் உயரம் கிட்டத்தட்ட சர்க்கஸில் இருந்த வளையத்தின் உயரத்திற்கே இருந்தது.இருந்தாலும் அவன் உடனே செயல்படவில்லை.

அவன் தயங்கியவாறு நின்றிருந்தான்.திருடன் காரணம் கேட்க அவன் சொன்னான்,''அய்யா,என்னைத் தவறாகஎடுத்துக் கொள்ளாதீர்கள்.என்னால் இது முடியாது.சர்க்கஸில் என்னைச்சுற்றி ஆயிரக்கணக்கானோர் இருந்து என்னை உற்சாகப் படுத்திக் கொண்டிருப்பர்.அவர்கள் தரும் உற்சாகத்திலேயே நான் அந்த வளையத்துக்குள் பாய்ந்து விடுவேன்.அந்த சூழல் இங்கு இல்லை.எனவே என்னால் இங்கு துவாரத்துக்குள் நுழைவதை எண்ணிக்கூடப் பார்க்க முடியவில்லை.

அடுத்தவர் தரும் உற்சாகத்துக்கு அவ்வளவு வலிமை...!

நன்றி; முக நூல் 

No comments: