Sunday, March 24, 2013

பிறந்த நாள் பரிசு - சிறுகதை

இந்த இருபது வருஷமா ஒரு  வருஷம் கூட  தவறாம எங்க வீட்ல என் பிறந்த நாளுக்கு எங்க அப்பா நான் கேட்காமலே எனக்கு புது ட்ரெஸ் வாங்கி கொடுப்பாங்க. ஆனா நீங்க நான் வாங்கி கேட்டு கூட எனக்கு வாங்கி தர மாட்டேன்குறிங்க. என்னமோ கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆனா மாதிரி முழுசா மூன்று வருஷம் கூட முடியல்ல என சத்தம் போட்டவாறு அடுப்படியில் இருந்து டீ கொண்டவாறு வெளியே வந்தால் மகேஸ்வரி.

நான் என்ன உங்க வீட்டு வேலைகாரிய இருக்குற வேலை எல்லாம் நான் செய்யணும் ஆனா எனக்குன்னு எதுமே நீங்க செய்ய மாட்டிங்க? என்று கேட்டவாறு வரும் தன் மனைவியை நிமிர்ந்து பார்த்தான் கணவன் சிவா.

என்னடி காலைலேயே ஆரம்பிச்சுட்டியா நிம்மதியா பேப்பர் படிக்க விடுறியா சும்மா தொன தொனன்னு பேசிக்கிட்டு என்று டீயை எடுத்து குடிக்க ஆரம்பித்தான் சிவா.

பின்னே என்ன என் பிறந்த நாள் வருது எனக்கு ஒரு புடவை எடுத்து கொடுங்கன்னு சொன்னேனே என்ன ஆச்சு. அன்னைக்கு நம்ம சொந்தகாரங்க எல்லாத்தையும் கூப்பிட்டு விருந்து வைக்கணும்னு சொன்னேன். உங்கள்ட இருந்து இன்னும் அதுக்கு பதில் வரல்ல என்றால் மகேஸ்வரி.

 நாம என்ன அம்பானி குடும்பமா? பிறந்த நாள் கொண்டாட என்றான்.

அம்பானி மாதிரி ஒன்னும் பெரிய அளவு விருந்து வைக்க சொல்லல அவரு மாதிரி சொகுசு கப்பல் வாங்கி தரவும் சொல்லல தங்க செயினு வைர மோதிரம் கேட்கல நம்ம வசதிக்கு ஏத்த மாதிரி ஒரு புடவை எடுக்கலாம்ல?

அடியே புடவை ஒன்னு எடுக்குறது பிரச்னை இல்லை ஆனா அங்க போன ஒரு நாளுல ஆகும். அதும் இல்லாம இப்ப இருக்குற விலைவாசிக்கு நம்ம விருந்து அது இதுன்னு தேவை இல்லாத செலவு இப்பவே குடும்பத்துக்கு என்னனென செலவு ஆகுது தெரியுமா?

இல்லாத மின்சாரத்துக்கு ஆயிரம் ஓவா ஆகுது. முன்னலாம் பத்து ரூபாய்க்கு காய்கறி வாங்க போன போதும் இப்ப அப்டியா இருக்கு. பெட்ரோல் என்னமா விலை ஏறி போச்சு நம்ம நாடு இருக்குற நிலைமைல இதெல்லாம் தேவையா என்று நொந்து கொண்டான்.
அன்று முழுவதும் புலம்பலிலேயே முடிந்தது. இரவு சாப்பிட்டு விட்டு கவலையாய் படுத்து கொண்டால் மகேஸ்வரி. அவனும் சாப்பிட்டு விட்டு படுத்து விட்டான். விடிஞ்சா பிறந்த நாள் கல்யாணம் ஆனாலே அவ்வளவு தான் போல என்று எண்ணியவாறு உறங்கிவிட்டாள்.

11.59...
........
........
.......
........
.......
......
......
12.00

மகேசு?மகேசு? கணவனின் சத்தம் கேட்கவே என்னங்க என எழுந்திரித்தால்.
கையில் பரிசுடன்  சிவா. என் அன்பு மனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்றவாறு அதை கொடுக்க பிரித்து பார்த்தால் புடவை இருந்தது. 
எப்பங்க வாங்குனிங்க என்றால் ஒரு வாரத்துக்கு முன்னமே வாங்கி வச்சுட்டேன் என்றான். மகேஸ்வரியின்  கண்களில் சந்தோசதின் துளி. 

அங்கு இருந்தது ஆடம்பரமான சொகுசு கப்பலோ வைர  மோதிரமோ பெரிய பரிசு பொருளோ  அல்ல. விலை மதிப்பில்லாத அன்பு மட்டுமே!


No comments: